• Jul 24 2025

எல்லோர் காலிலும் விழும் ராஷ்மிகா..அவருக்கு இப்படியொரு பழக்கமா..ஆர்ச்சத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஜனவரியில் மிஷன் மஜ்னு என்ற படம் ரிலீஸ் ஆன் நிலையில் அடுத்து அவர் ரன்பீர் கபூர் ஜோடியாக நடிக்கும் அனிமல் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

இதனையடுத்து அவர் அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார்.



இவ்வாறுஇருக்கையில்  ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய விஷயம் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

"எனக்கு சின்ன சின்ன விஷயங்களும் முக்கியம். நான் காலையில் எழுந்ததும் என்னுடன் செல்ல பிராணிகள் உடன் நேரத்தை செலவிடுவேன்.அத்தோடு நண்பர்களை பார்ப்பேன். அது என்னை மகிழ்ச்சி ஆக்கும்.



"வார்த்தைகள் அதிகம் சக்தி வாய்ந்தவை. அதனால் தான் யாரவது எதாவது சொன்னால் எனக்கு வருத்தம் ஏற்படும். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நான் டைரியில் எழுதி வைப்பேன்."

"நான் வீட்டில் இருந்தால் மரியாதைக்காக நான் எல்லோர் காலிலும் விழுவேன். வீட்டில் வேலை செய்யும் house help காலில் கூட விழுவேன்.மேலும்  இதில் கூட வேறுபடுத்தி பார்க்கமாட்டேன். இப்படி எல்லோரையும் மதிப்பவர் நான்" என ராஷ்மிகா கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement