• Jul 24 2025

நடிகை சிம்ரனுக்காக மேனேஜர் வேலையை விட்ட சூர்யா..! உண்மையை போட்டுடைத்த குணசேகரன்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா சினிமாவிற்குள் தனது அப்பாவின் மூலம் வந்திருந்தாலும் இவருடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையான நடிப்பும் தான் இவரை இந்த அளவிற்கு உயர்த்தி வந்திருக்கிறது. இப்பொழுது மிகவும் பிரபலமான முன்னணி நடிகராக இருக்கிறார். அத்துடன் இவருடைய சினிமா துறையில் மிக உச்ச நடிகராக வலம் வந்து விட்டார் என்றே சொல்லலாம்.

ஆனால் இவர் நடிப்பதற்கு முன்னர் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் துறையில் சாதாரண எம்ப்ளாயாக வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்பொழுது அங்கே வேலை பார்ப்பவர்களிடம் இவர் சிவகுமாரின் மகன் என்று காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார் 

பின்பு இவர் மேனேஜர் பொறுப்பிற்கு வந்த இரண்டு மாதங்களில் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அடுத்ததாக இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு பெரிய நாட்டம் ஏற்படாமல் இருந்ததால் தொடர்ந்து மேனேஜர் வேலையை பார்க்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அந்த நேரத்தில் இவருக்கு வந்த வாய்ப்பு தான் நேருக்கு நேர் படம். அதில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கப் போகிறார் என்பதை தெரிந்த பிறகு அவருக்குடன் நடிப்பதற்கு ஆசைப்பட்டு மேனேஜர் வேலையை வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.

இதைப்பற்றி இவருடைய கம்பெனியில் நான் வேலையை விட்டுப் போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவர்கள் இப்பொழுது தானே உனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு ஏன் இந்த நேரத்தில் இப்படி முடிவு எடுத்து இருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். உடனே அவர்கள் கிண்டல் பண்றியா உனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்திருக்கும். நீ எப்படி சினிமாவில் நடிக்க முடியும் என்று கேட்டிருக்கிறார்கள்.

அப்பொழுது தான் சூர்யா, அவர்களிடம் நான் நடிகர் சிவக்குமாரின் மகன் என்று சொல்லி இருக்கிறார். இவர் சொன்ன பிறகுதான் அந்த கம்பெனியில் இருக்கிறவர்களுக்கு தெரியும் இவருடைய அப்பா சிவக்குமார் என்று. அதுவரை இவர் யாரிடமும் சொல்லிக்கவில்லையாம். ஏனென்றால் இவர் படித்து முடித்த உடனே சிவக்குமார் போட்ட முதல் கண்டிஷன் நீங்கள் எங்கே போனாலும் என் பெயரை வைத்து எந்த லாபத்தையும் பெறக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

அதனால் இவர் யாரிடமும் எதை பற்றியும் காட்டிக் கொள்ளவில்லை. அப்படி இவர் சிம்ரனுக்காக மேனேஜர் வேலையை விட்டு நடித்த முதல் படம் தான் நேருக்கு நேர். இதைப்பற்றி சமீபத்தில் நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து அதாவது எதிர்நீச்சல் குணசேகரன் இப்படி சொன்னால் இப்பொழுது நன்றாகவே இவர் யார் என்று தெரியும். இவர் தான் இந்த ரகசியத்தை பற்றி சமீபத்தில் கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement