• Jul 26 2025

மனைவியின் வளைகாப்பு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடிய ஆர்.கே.சுரேஷ்- யாரெல்லாம் போயிருக்கிறாங்க தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான தாரைதப்பட்டை என்னும் திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகியவர் தான் ஆர் கே. சுரேஷ்,இவர் இதனைத் தொடர்ந்து மருது படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.


சமீபத்தில் ‘ஜோசப்’  மலையாள படத்தின் தமிழ் ரீமேக் விசித்திரன் படத்தில் நடித்திருந்தார். விஜய் ஆண்டனி நடித்த சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை ஆகிய படங்களை தயாரித்துள்ளார். பரதேசி, சூது கவ்வும், தங்க மீன்கள், மதயானை கூட்டம், லைகர், மாமனிதன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார்.


இது தவிர பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்ட பிரிவின் துணை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.இச்சூழலில் ஆர்கே சுரேஷின் மனைவி மதுவின் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, எர்னாவூர் நாராயணன், அர்ஜூன் சம்பத், திருமாறன் ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் இந்நிகழ்ச்சிக்கு  இயக்குநர் ஷங்கரின் மனைவி ஈஸ்வரி, இயக்குநர் மிஷ்கின், நடிகர் கௌதம் கார்த்திக், நடிகர் விமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆர்கே சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement