• Jul 24 2025

மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில்... இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையை வனிதாவிடம் கூறிய ரோபோ சங்கர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்ட ரோபோ சங்கரை, மிகவும் பிரபலமாக்கியது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் இவருடைய காமெடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்தார்.


சமீபத்தில் மஞ்சள் காமாளை நோயினால் பாதிக்கப்பட்டு வந்த இவர் தற்போது அதிலிருந்து மீண்டு இருக்கின்றார். இந்நிலையில் இவர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்லாது இதற்கு இடையில் இருக்கும் பிரச்சனை குறித்தும் ஓப்பனாக பேசி இருந்தார்.

அதாவது வனிதா விஜயகுமார் சமீபத்தில் ரோபோ ஷங்கர் மற்றும் அவரின் மனைவியை பேட்டி எடுத்திருந்தார். அந்த சமயத்தில் மஞ்சள் காமாலை வந்ததில் இருந்து, அதற்கான சிகிச்சை எடுக்க உதவியவர்கள் அனைவர்க்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

அத்தோடு "இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை இருக்கிறது. அதற்கு முயற்சி செய்து வருகிறேன். ஆனால், நான் இரவு நேரத்தில் ஷூட்டிங் சென்று விடுவதால் அதுக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது" எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை குறித்து, ரோபோ ஷங்கர் வெளிப்படையாக பேசியுள்ளமை அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement