• Jul 25 2025

சீரியல் பிரபலங்களுடன் சேர்ந்து ஜிம்மில் கலாட்டா செய்த ரோபோ ஷங்கர்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தொலைகாட்சியில் மிமிக்ரி கலைஞராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்து தடம் பதித்தவர் ரோபோ சங்கர். தனுஷ், சிவகார்த்திகேயன், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இவரது ‘அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு’ காமெடி மிகவும் பிரபலம். சினிமா தவிர்த்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வந்தார் ரோபோ சங்கர்.

சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. பலரும் அவரது புகைப்படங்களை பகிர்ந்து ரோபோ சங்கருக்கு என்னவானது என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். காரணம் அவரது கட்டுமஸ்தான உடல். திடீரென அவர் கடுமையாக உடல் இளைத்தது குறித்து பலவாறான கருத்துகள் பரவி வந்தன. 

ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை என்றும், அவர் எழுந்து நிற்கவே முடியாமல் சிரமப்படுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகிவந்தன. இதையடுத்து அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இதனை அடுத்து ரோபோ ஷங்கர் ஒர்க்கவுட்லையும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் சீரியல் பிரபலங்களுடன் இணைந்து ஜிம்மில் கலாட்டா செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement