• Jul 24 2025

எங்கிருந்துடா வர்றீங்க?- மாவீரன் படம் குறித்து வெளியாகிய வீடியோ விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பதிலடி

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களாகவே 'மாவீரன்' படத்தின் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நடந்த இந்த ப்ரமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் மும்முரமாக கலந்து கொண்டார்.

 தனது முந்தைய படமான 'பிரின்ஸ்' போல் அல்லாமல் 'மாவீரன்' கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் இன்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்போன்ஸ் கிடைத்தது.


சமூக வலைத்தளங்களிலும் படத்தை பாராட்டி ரசிகர்கள் பேசி வருகின்றனர்.இந்நிலையில் மாவீரன் படத்தின் முதல் ஷோ தொடங்கும் முன்பே Theater review என்ற பெயரில் youtubeல் அதிகம் வீடியோக்கள் வந்ததை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் கமெண்ட் செய்து இருக்கிறார்.

"எங்கிருந்துடா வர்றீங்க?! இன்னும் படமே ஆரம்பிக்கலை... ஒன்பது மணிக்குத்தான் முதல் ஷோவே... அதற்குள்ள பப்ளிக் ரிவிவ்யூ... எப்படிர்ராராராரா" என அவர் கேட்டிருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement