• Jul 24 2025

மனோஜை கல்யாணம் பண்ண மறுத்த ரோகினி- திடீரென முத்து எடுத்த முடிவு- வெளியாகிய ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. புதிதாக ஆரம்பித்தாலும் இந்த சீரியல் டிஆர்பியிலும் முன்னணியில் நிற்கின்றது.

இதில் மீனாவும் முத்துவும் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டாலும் தற்பொழுது இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்து விட்டனர். மறுபுறம் மனோஜிற்கும் ரோகினிக்கும் திருமண ஏற்பாட்டினை விஜயா செய்து வருகின்றார்.


இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது மனோஜின் திருமணத்திற்காக எல்லோரும் கோயிலுக்குச் சென்றுள்ளனர். ஆனால் ரோகினி மனோஜை கல்யாணம் செய்து கொண்டால் உண்மை எல்லாம் சொல்லப்போவதாக ஆபிஸில் வேலை செய்யும் ஒருவர் போன்  பண்ணி மிரட்டுதால் ரோகினி கல்யாணம் பண்ணிக்க போறதில்லை என இடையில் இறங்குகின்றார்.

மறுபுறம் ரோகினி வராததால் முத்து இந்தப் பொண்ணும் ஓடிப் போச்சா, பொண்ணு வந்தவுடன் சொல்லுங்க நாங்க வாறோம் என மீனாவைக் கூட்டிக் கொண்டு கிளம்புகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement