• Jul 24 2025

சூர்யாவுக்கு கட்டவுட் வைத்த இரண்டு ரசிகர்கள் உயிரிழப்பு..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவுக்கு அதிக அளவு ரசிகர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திராவிலும் இருக்கிறார்கள். இன்று சூர்யாவின் 48 வது பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அதை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா தற்போது நடித்து வரும் கங்குவா படத்தின் க்லிம்ஸ் வீடியோ இரவு 12.01க்கு வெளியாகி தற்போது இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஆந்திராவின் பால்நாடு பகுதியில் Narasaraopet என்ற இடத்தில் சூர்யா ரசிகர்கள் அவர் பிறந்தநாளை கொண்டாட பெரிய கட்டவுட் வைத்து இருக்கின்றனர். அப்போது அந்த கட்டவுட்டின் இரும்பு ஃபிரேம் மேலே இருக்கும் மின்சார கம்பியில் உரசி இருக்கிறது.

மின்சாரம் தாக்கியதில் இரண்டு சூர்யா ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கின்றனர். அவர்கள் தற்போது இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement