• Jul 24 2025

ரோஜா சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பமாகவுள்ளதா?- பிரியங்கா நல்காரி கொடுத்த புதிய அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஆரம்ப காலத்திலிருந்தே பல சீரியல்கள் சூப்பராக ஒளிபரப்பாகி வருகின்றது.

அந்த வகையில் இதில் 4 வருடங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடிய சீரியல் தான் ரோஜா. காதல் கதையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த நிலையில் கதாநாயகியாக நடித்து வந்த ப்ரியங்கா நல்காரி ரோஜா சீரியல் பயணம் குறித்து ஒர் பதிவினை இட்டுள்ளார். அதில் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம்! ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாமல் இங்கு ஏன் வந்தாய், நீங்கள் எல்லாம் உங்கள் மகளுக்கு என்ன செய்தீர்கள்!

Indha 4+Years la, நிறைய நிறைய அன்பும் பாசமும் எனக்காக நீங்க எல்லாரும் குடுத்திருக்கிறீங்க! உங்களோட அன்புக்கு நான் என்ன செய்ய போறேன்னு தெரியல, ஆனா இந்த லவ்வுக்கெல்லாம் நான் பாக்கியசாலின்னு தோணுது!


சீரியலில் மட்டுமின்றி, உங்கள் அனைவரின் இதயத்திலும் ரோஜாவாக இருக்க, எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த சரிகம மற்றும் சன் டிவிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

 நல்ல உள்ளங்களோட அன்பு, ஆசீர்வாதத்தோட, நான் ரோஜாவாக கையெழுத்திடுகிறேன்!இது முடிவில்லா! இன்னொரு புதிய ஆரம்பம்! விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்போம்!என்றும் அன்புடன்பிரியங்கா நல்காரி # ரோஜா என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement