• Jul 24 2025

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஓடுகிறது பாக்கியலட்சுமி. 


மேலும் குடும்பமே வாழ்க்கை என இருந்த பெண்ணை கணவன் ஏமாற்ற அதனால் துவண்டு போகாமல் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என போராடும் என குடும்ப தலைவியின் கதையாக அமைந்துள்ளது.


கதையில் இருப்பது போல் நிஜ வாழ்க்கையில் பல பெண்கள் இந்த சூழ்நிலையில் இருந்த அவர்களின் ஆதரவு தொடருக்கு அதிகம் கிடைத்துள்ளது.


இப்போது கதையில் மேலும் விறுவிறுப்புகள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ரித்திகா. இவருக்கும் வினு என்பவருக்கு கடந்த நவம்பர் 20ம் தேதி மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. 


அவர்களது திருமண செய்தி கேட்டு பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்து கூறி வந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ரித்திகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க..


Advertisement

Advertisement