• Jul 26 2025

முக்கிய விருதின் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த 'RRR'... குஷியில் படக்குழு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர் ஆரம்பத்தில் இருந்தே தனது படங்களில் மக்கள் பிரம்மித்துப் பார்க்கும் வகையில் காட்சிகளை வைத்து, அனிமேஷன் விஷயங்களின் மூலமாக அசத்தி வருகிறார்.

அந்தவகையில் அவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான பிரம்மாண்ட திரைப்படம் 'RRR'. இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர், பாலிவுட் நடிகர்கள் ஆலியா பட், அஜய் தேவ்கன் என பலரும் இணைந்து நடித்திருந்தனர்.


மேலும் ரூ. 550 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் மொத்தமாக ரூ. 1200 கோடி வரை வசூல் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படுவது என்றால் அது 'ஆஸ்கர் விருது' தான். 


ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விருதிற்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்படங்கள் போட்டியிடும். அந்தவகையில் 95-ஆவது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு நடைபெற உள்ளது.

அதில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து என்கிற பாடல் இடம்பெற்று உள்ளது. இதனையறிந்த ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement