• Jul 25 2025

''தம்பி அஜித்தின் அப்பா மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்''.. கமலஹாசன் இரங்கல் பதிவு!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். 

சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அதில், தம்பி அஜித்குமாரின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisement

Advertisement