• Jul 25 2025

தந்தை மறைவால் அழுது கண்ணீர் வடிக்கும் அஜித்... ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து சிம்பு ஆறுதல் வார்த்தை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் தந்தை இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில வருடங்களாக சிகிச்சையில் இருந்து வந்த அவர் இறந்த நிலையில் இறுதி சடங்குகள் இன்று நடந்து முடிந்திருக்கிறது. சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அஜித் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி இருக்கின்றனர்.

எது எவ்வாறாயினும் அஜித்தின் தந்தையினுடைய இழப்பானது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஏனெனில் அஜித்தின் 62ஆவது படம் குறித்த அப்டேட்டுக்காக காத்திருந்த பலருக்கும் இந்த தகவலானது கவலையாகவே உள்ளது.


இந்நிலையில் நடிகர் சிம்புவும் தனது கவலையையும், இரங்கலையும் அஜித் குடும்பத்திற்குத் தெரிவித்துள்ளார். அந்தவகையில் "தந்தையை இழந்து வாடும் அஜித் சாருக்கு ஆழ்ந்த இரங்கல், இந்தக் கடினமான நேரத்தை எதிர்கொள்வதற்கான மன வலிமையை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கடவுள் கொடுக்கப் பிரார்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்கள். இவரைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்களும் அஜித்திற்குத் தங்களது ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement