• Jul 26 2025

கெஞ்சி அழுதும் பிரபல இயக்குநரால் அவமானப்படுத்தப்பட்ட சதா- உண்மையை உடைத்த நடிகை- அடப்பாவமே....

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் சதா.ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

ஹோம்லியான முகம், நல்லபடியான நடிப்பு என அவருக்கு திறமை இருந்ததால் அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் அமைந்தன. குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு சதாவுக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் சிறப்பாகவே நடித்தார். 


சதாவும் அந்தப் படத்தில் கவனிக்கப்பட்டதால் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்தன. மாதவனுடன் பிரியசகி, அஜித்துடன் திருப்பதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. 

தமிழில் அவர் கடைசியாக டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் சதா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது தனது ஷூட்டிங் ஸ்பாட் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தேஜா இயக்கிய படத்தில் ஒரு மோசனமான காட்சியில் நடித்ததை இப்போதும் வருத்தப்படுகிறேன். 


வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் என் கன்னத்தை நக்குவது போன்ற காட்சி இருந்தது. இந்த மாதிரியான காட்சியில் நடிக்க மாட்டேன் என சொல்லிப்பார்த்து ஒருகட்டத்தில் கெஞ்ச ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவோ கெஞ்சியும் அந்த இயக்குநரோ படத்தில் இந்தக் காட்சி வேண்டும் என்று சொல்லி படமாக்கிவிட்டார். அந்தக் காட்சியை நடித்து முடித்த பிறகு வீட்டுக்கு சென்று ரொம்பவே அழுதேன்" என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement