• Jul 25 2025

செல்போன் நம்பர் இருந்தும் தொடர்பு கொள்ள துணிச்சல் இல்லை... சாய் பல்லவி மீது பயங்கர கிரஷ்ஷில் திருமணமான நடிகர்... அவரே கூறிய தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சாய் பல்லவி தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் படித்தது மருத்துவ படிப்பு என்றாலும் சினிமாவில் மட்டுமே அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.


இவரின் அழகிற்கும், சாந்தமான குணத்திற்கும் மயங்காதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்தவகையில் சமீபத்தில் சாய் பல்லவி மீது கிரஷ் இருப்பதாகவும், ஆனால் அவரை தொடர்பு கொள்ள தைரியம் இல்லை என்றும் நடிகர் குல்ஷன் தேவையா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


அதாவது இவர் பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் அதிகம் நடித்து வருகின்றார். இவர் நடிகை Kallirroi Tziafeta-ஐ கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், பின்னர் 2020ம் ஆண்டு பிரிந்துவிட்டார்கள். இருந்தாலும் இன்றுவரை மனைவியுடன் நட்பாக இருந்து வருவதாக தெரிவித்தார் குல்ஷன். 


இந்நிலையில் சாய் பல்லவி பற்றி குல்ஷன் தேவய்யா கூறுகையில் "எனக்கு சாய் பல்லவி மீது பயங்கர கிரஷ். இது சில காலமாகவே இருக்கிறது. என்னிடம் அவரின் செல்போன் நம்பர் கூட இருக்கிறது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள கொஞ்சமும் எனக்கு துணிச்சல் இல்லை. அவர் ஒரு அருமையான டான்ஸர், நடிகை என நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் "இது வெறும் கிரஷ் தான். அதை தாண்டி வேறு எதுவும் இல்லை. அவர் சிறந்த நடிகை. எப்பொழுதாவது அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அது போதும் எனக்கு. மற்றது பற்றி தெரியவில்லை. மற்றவை நடக்காவிட்டால் என்ன செய்வது?. ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று இருந்தால் அது நடக்கும், இல்லை என்றால் அது நடக்காது. ஒரு சிறந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நல்லது. அதில் தவறு எதுவும் இல்லையே" எனவும் கூறியுள்ளார் நடிகர் குல்ஷன் தேவய்யா.

Advertisement

Advertisement