• Jul 25 2025

4வருடமாக உருகி உருகிக் காதலித்த சாக்ஷி அகர்வால்.. அதுவும் இந்த நபரையா..? அப்புறம் என்னாச்சு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன் மூலம் கிடைத்த புகழின் வாயிலாக தற்போது 'புரவி, ஆயிரம் ஜென்மங்கள், குறுக்கு வழி' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


இதற்கான படப்பிடிப்புக்கள் யாவும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராகவுள்ளது


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தனது காதல் கதை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால். அந்தவகையில் இது குறித்து பேசிய அவர் "நான் கல்லூரி படித்து கொண்டிருந்த சமயத்தில் ஒருவரை காதலித்தேன். கிட்டத்தட்ட நாங்கள் 4 வருடங்கள் உண்மையாகக் காதலித்தோம்.


பிறகு ஒரு சில காரணங்களால் நாங்கள் பிரிந்துவிட்டோம். நான் படித்தது இன்ஜினியரிங் காலேஜ். அந்தக் கல்லூரியில் தான் அவரை நான் காதலித்தேன். 4 வருடம் கல்லூரியில் மட்டுமே நாங்கள் காதலித்தோம். அங்கு இருவரும் ஒன்றாக தான் சென்று சாப்பிட செல்வோம். 

ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் நாங்கள் இருவரும் நிரந்தரமாகப் பிரிந்துவிட்டோம்” என சோகத்துடன் பேசியுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால். 

Advertisement

Advertisement