• Jul 25 2025

அவருக்கு நான் அம்மா மாதிரி.. யாரை சொன்னார் ராஷ்மிகா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிகறார். தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து முடித்து இருக்கும் அவர் அடுத்து ஹிந்தியில் மிஷன் மஞ்னு என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். அந்த படம் ஹிட் ஆனால் அடுத்து ராஷ்மிகா ஹிந்தி சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக ராஷ்மிகா பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். மேலும் அவர் விஜய் தேவரகொண்டா உடன் மாலத்தீவுக்கு ஜோடியாக சுற்றுலா சென்றதாக அவர்களது நீச்சல் குள போட்டோ சமீபத்தில் வைரல் ஆனது.

அத்தோடு  தென்னிந்திய சினிமாவில் எப்போதும் ஐட்டம் பாடல்கள் அல்லது டான்ஸ் பாடல்கள் தான் இருக்கிறது என ரஷ்மிகா கூறியதும் சர்ச்சை ஏற்படுத்தியது.



இவ்வாறுஇருக்கையில்  சமீபத்திய பேட்டியில் ராஷ்மிகா நடிகை சமந்தா பற்றி பேசி இருக்கிறார்.

சமந்தா அழகான இதயம் கொண்டவர். அவரை நான் எப்போதும் பாதுகாக்க விரும்புகிறேன். அவரது விஷயத்தில் நான் ஒரு possessive அம்மாவை போன்று தான் இருப்பேன்.

மேலும் அவருக்கு myositis என்று நோய் இருப்பது தெரியும். ஒருவரை நமக்கு பிடித்துவிட்டால், அவர் கண்டிப்பாக அனைத்து போராட்டங்களிலும் ஜெயிக்க வேண்டும் என நினைப்போம். சமந்தா விஷயத்தில் நானும் அப்படி தான் நினைக்கிறேன். அவர் மீது நான் அதிகம் possessive ஆக இருக்கேன்.


இவ்வாறு ராஷ்மிகா பேட்டி அளித்திருக்கிறார். 

Advertisement

Advertisement