• Jul 24 2025

சல்மான்கானுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்த மிரட்டல் குறித்து வெளியான புதிய தகவல்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு கடந்த வாரம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. 

ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பந்த்ரா போலீசில் புகார் செய்தார்.

போலீசார் ரவுடியான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், சல்மானுக்கு ஒய்.பிளஸ். பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சல்மான்கானுக்கு இங்கிலாந்தில் இருந்து மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இமெயில் ஐ.டி. இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த எண் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

Advertisement