• Jul 24 2025

கண்ணீரில் தத்தளிக்கும் அஜித் குடும்பம்.. இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார். அதாவது கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்த நிலையில், இன்று அதிகாலை தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. 


இவரின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்படம் ஏராளமான அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அஜித் தந்தையின் உடன் தகனம் செய்யப்பட்டது. 


இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்த்தும் அஜித் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில் "தந்தையை இழந்து வாடும் அஜித் குமாரிற்கும் அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" எனக் கூறியுள்ளார். இந்தவிடயமானது தற்போது அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது. 


Advertisement

Advertisement