• Jul 25 2025

எல்லா படமும் எனக்கு ஒன்றுதான்... நேரடியாக கூறிவிட்டார் சாம் சி.எஸ்...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் அவர்கள் கொன்றால் பாவம் திரைப்பட நிகழ்வில் கலந்து கொண்டு அத்திரைப்படத்தை பற்றி கூறி இருந்தார். அவர் கூறுகையில், இந்த படத்தில் நான் இணைந்ததற்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.


ஏனென்றால், இந்த படம் ஒரு எதார்த்தமான படமாக இருக்கும். நம்ம நிறைய படம் பண்ணுவோம், ஆனால் ஒரு படத்தில் வரும் கதாபாத்திரத்தோடு நம்ம கனெக்ட் ஆகும்போது தான் அந்த படம் நமக்கு பிடிக்குது. அந்த படத்தில் நாங்களே இருப்பதாய் உணரும்போது.


இந்த படமும் அப்படியான படமாக தான் இருக்கிறது. ஆசை சம்மந்தமான ஒரு படம் தான் இது. இந்த படத்தின் இயக்குநரிற்கு எப்படி பட்ட இசை வேணும் என்பது தெளிவாக தெரிந்திருந்தது. சில பேர் வேறு படத்தை போல் பண்ணி கொடுங்க என்று கேட்பார்கள். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இருக்காது.


ஆனால் இவர் இசையை பற்றி தெரிந்த ஒரு இயக்குநராக இருக்கிறார். மேலும் அவர் இந்த படத்தை 14 நாட்களில் முடித்தார். ஆனால் எனக்கு வேற படங்களும் இருப்பதால் அவசரமாக செய்ய முடியவில்லை. பெரிய படம், சின்ன படம் என்று வேறுபாடு பார்ப்பதில்லை. எல்லாமே படம்தான்.


சில விஷயங்கள் அவரோட பேசமுடியவில்லை. அவர் நினைப்பார் நாங்க 14 நாட்களில் முடித்து விட்டோம் நீங்கள் தான் முடித்து கொடுக்கவில்லை என்று. எனக்கு கொன்றால் பாவம் படமும் முக்கியம்தான் என்று படத்தையும் இயக்குநரையும் பற்றி பேசி இருந்தார்.


Advertisement

Advertisement