• Jul 25 2025

பிரபல நடிகருடன் கடுமையான பாக்சிங் பயிற்சியில் களமிறங்கிய சமந்தா

stella / 2 years ago

Advertisement

Listen News!

சென்னை பல்லாவரத்து பெண்ணான சமந்தா, தன்னுடைய நடிப்பு திறமையால் கோலிவுட், டோலிவுட் திரையுலகை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க ஆயத்தமாகி விட்டார். இவரின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நடிப்பின் மீது இவருக்கு உள்ள காதல் என்றே கூறலாம்.

தொடர்ந்து தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்திவந்த சமந்தாவின் வாழ்க்கையில், இடி விழுந்தது போல் இவருக்கு மயோசிட்டிஸ் பிரச்சனை தாக்கம் ஏற்பட்டது. சுமார் 6 மாதத்திற்கு மேலாக இந்த பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் சமந்தா, தொடர்ந்து அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறார்.


மெல்ல மெல்ல... பழைய நிலைக்கு திரும்பியுள்ள இவர் மீண்டும் படப்பிடிப்பு, உடல்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றார்.இரு நாட்களுக்கு முன் கூட கால்களால் செய்யும் ஒர்கவுட் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த அனைத்து வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் படுவைரலானது.


இந்நிலையில், உத்திரகாண்டில் இருக்கும் நடிகை சமந்தா அங்கு பாக்சிங் பயிற்சி எடுக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.பாலிவுட்டில் அடுத்ததாக தான் நடிக்கவிருக்கும் சிடேட்டல் வெப் சீரிஸுக்காக இந்த பாக்சிங் பயிற்சி எடுத்து வருகிறாராம்.


இந்த வெப் சீரிஸில் சமந்தாவுடன் இணைந்து பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். மேலும் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே தான் இந்த வெப் சீரிஸையும் இயக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement