• Jul 24 2025

சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படத்தின் 9 நாள் வசூல் விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகும் படங்களை அனைத்துமே மக்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களை பெற்ற வண்ணமே இருக்கின்றன. 

இவர்  நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அத்தோடு  சமந்தா உடலநலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கண்ணீருடன் பேட்டி  எல்லாம் கொடுத்திருந்தார். அது இணையத்தில் அதிகம் வைரலானது.


அதன் பின் வெளியான யசோதா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அத்தோடு  ரசிகர்கள் தியேட்டரில் கொடுத்திருக்கும் ரெஸ்பான்ஸுக்கு சமந்தா நன்றி தெரிவித்து இருந்தார்.

தற்போது ஒன்பது நாட்களில் யசோதா படம் 30 கோடி வசூலை தொட இருக்கிறது. மேலும் இப் படத்தின் பட்ஜெட் உடன் ஒப்பிடும்போது இது நல்ல வசூல்தான் என பாக்ஸ்ஆபிஸ் ட்ராக்கர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.


யசோதா படம் வெளியான நான்கு நாட்களிலேயே 20 கோடி அளவுக்கு வசூலித்துவிட்டது. அதன் பிறகு வசூல் அப்படியே குறைந்தததால் 9 நாட்களுக்கு பிறகு தான் 30 கோடி என்ற மைல்கல்லை தொட இருக்கிறது. 


Advertisement

Advertisement