• Jul 25 2025

விஜய் சேதுபதியின் நடிப்பில் ரிலீஸ் ஆகும் அடுத்த படம்.. போஸ்டருடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார்.

மேலும்  இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி வாஸ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 23 வயதான திருச்சியை சேர்ந்த இவர் விளம்பர மாடலாக தற்போது வலம் வருகிறார். அத்தோடு இவர் உலக அழகி போட்டியில் முதல் 30 இடங்களுக்குள் வந்தவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கியது. இந்த படத்தில் திண்டுக்கல் மாவட்ட DSP ஆக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இன்று வெளியான படத்தின் தலைப்பும் DSP என்றே வைக்கப்பட்டுள்ளது. வாஸ்கோடகாமா என்ற போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அத்தோடு சில மாதங்களுக்கு முன்  செங்கல்பட்டில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அத்தோடு இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

முன்னதாக வெளியாகியிருந்த இந்த படத்தின் போஸ்டரில் செந்நிற பிண்ணனியில் திண்டுக்கல் நகரம் இருந்தது. அத்தோடு ராயல் என்ஃபீல்டு பைக்கில் விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் வருவது போல் போஸ்டர் அமைந்திருந்தது.



இவ்வாறுஇருக்கையில்  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பிலான இந்த படம் டிசம்பர் 2-ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement