• Jul 25 2025

விவாகரத்து ஆனாலும்... பாசம் மாறாத சமந்தா... இன்றுவரை தொடர்ந்து வரும் அந்த உறவு.. குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தாவும், அவரின் காதல் கணவரான நாக சைதன்யாவும் விவாகரத்துப் பெற்று நிரந்தரமாகப் பிரிந்துவிட்டமை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் நாக சைதன்யாவை பிரிந்தாலும் அவரின் தம்பியும், நடிகருமான அகில் அகினேனியுடனான நட்பை இன்றுவரை தொடர்ந்து வருகின்றார் சமந்தா. 


இந்நிலையில் தான் தற்போது நடிகர் அகில் தான் நடித்திருக்கும் 'ஏஜென்ட்' பட டீஸரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். அதைப் பார்த்த நம்ம சமந்தாவால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உடனே ஏஜென்ட் டீஸர் தொடர்பான அகிலின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை லைக் செய்துள்ளார் அவரின் முன்னாள் அண்ணியான சமந்தா. 


அதுமட்டுமல்லாது கமெண்ட் பாக்ஸில் பீஸ்ட் மோடு ஆன் என்று கூறி அவரை ஊக்குவிக்கும் தீ எமோஜியை தட்டிவிட்டுள்ளார் சமந்தா. அதை பார்த்த அகில் ரசிகர்கள், சமந்தாவுக்கு தங்களுடைய நன்றியைத் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் "அகில் மீதான பாசம் சமந்தாவிற்கு இன்னும் அப்படியே தான் இருக்கிறது. இப்படி மனதார பாராட்ட நல்ல மனது வேண்டும். அது சமந்தாவுக்கு இருக்கிறது" என தெரிவித்துள்ளனர்.


சமந்தா அகிலுக்கு முன்னாள் அண்ணி ஆகிவிட்டாலும் அவர் மீது மதிப்பும், குறையாத மரியாதையும் இன்றுவரை வைத்திருக்கிறார் அகில். அத்தோடு சமந்தா தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட போது முதல் ஆளாக தைரியம் சொன்னவரும் அந்த அகில் தான். இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமந்தாவை பாராட்டத் தவறாதவர். 


இந்த நிலையில் தான் சமந்தா, அகில் இடையேயான இந்த நட்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நாக சைதன்யாவை பிரிந்தாலும், அகிலுடனான நட்பை தொடர்ந்து வரும் சமந்தாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement