• Jul 26 2025

காயமடைந்த நிலையில்.. கையில் பெரிய கட்டுடன் சுதா கொங்கரா.. என்ன ஆச்சு.. பதற்றத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தன்னுடைய திரைப்படங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து இழுத்தவர் சுதா கொங்கரா. இவர் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் அச்சு அசல் கதாபாத்திரங்களாக மட்டுமே தெரியுமளவிற்கு, அவர்களை தயார் செய்து, யதார்த்த நடிப்பை வெளிக்கொண்டு வரும் சிறந்த ஒரு இயக்குநராக விளங்கி வருகின்றார். 


இவர் 'இறுதிச் சுற்று' படத்தின் மூலம் தான் ஒரு சிறந்த இயக்குநராக திரையுலகில் முத்திரை பதித்தவர். இதற்கு முன்னரும் அவர் ஒரு சில படங்களை இயக்கியிருந்தாலும், இறுதி சுற்று தான் ரசிகர்கள் மத்தியில் அவரை பெருமளவிற்கு கொண்டு சென்று சேர்த்தது.


இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்த சுதா கொங்கரா பல சாதனைகளைக் குவித்த 'சூரரைப் போற்று' எனும் மாபெரும் வெற்றி படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தார். இப்படமானது நேரடியாக ஓடிடியில் வெளிவந்தாலும், இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அமோகம்.


அதுமட்டுமல்லாது தற்போது சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வரும் இயக்குநர் சுதா கொங்கரா விரைவில் ஒரு டாப் நடிகருடன் தமிழில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தின் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.


இந்நிலையில், சுதா கொங்கராவிற்கு தற்போது எதிர்பாராத விதமாக கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கையில் பெரிய கட்டுடன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்கியுள்ளனர்.


Advertisement

Advertisement