• Jul 25 2025

துப்பாக்கி சூடுபடும் சந்தியா..அதிரடி முடிவு எடுத்த சிவகாமி...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியலில்  ஒன்றுதான் ராஜா ராணி. இந்த நாடகத்தின் பாகம் 1 மிகப்பெரிய வெற்றி அடைந்ததன் காரணமாக பாகம் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற மருமகளின் கனவு நிறைவேறுமா..? அதற்கு  கணவர் எப்படி உறுதுணையாக இருக்கப் போகிறார்? என்பது பற்றிய கதை.

எனினும் தற்போது பல தடைகளைத் தாண்டி சந்தியா போலீஸ் அதிகாரியாக ட்ரைனிங்க்கு சென்று இருக்கிறார். அத்தோடு அங்கும் அவருக்கு பல தடைகள் ஏற்படுகிறது. அதை எல்லாம் மீறி அவர் போலீஸ் அதிகாரியாக ஆவாரா? இல்லையா? என்பது குறித்த கதை தான் ராஜா ராணி சீசன் 2. 

அந்தவகையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது .

அதில் சந்தியாவை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சூட பதிறியடித்த ஜோதி அலறியடித்து எல்லோரையும் கூப்பிட எல்லோரும்  சந்தியாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள்.

 ஹாஸ்பிடலில் சந்தியா இருப்பதை அறிந்த சரவணனும்  மாமியாரும் பதறி அடித்து ஓடுகிறார்கள்,அங்கு சென்ற மாமியார்  ,சந்தியாவிற்கு என்னாச்சு ,உங்களால தான் இப்போ அவளோட உயிருக்கு ஆபத்தாகி இருக்கு ,இந்த ஆபத்தான போலீஸ் வேலையே வேணாம் ,நான் என்னுடைய மருமகள வீட்டுக்கே கூட்டிட்டு போறன் .என்று சந்தியாவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement