• Jul 25 2025

கிறிஸ்மஸ் கொண்டாட வெளிநாட்டுக்குச் சென்ற சந்தானம்- தூங்கும் நிஜ புலியின் வாலைப் பிடித்ததால் ஏற்பட்ட சம்பவம்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகியவர் தான் சந்தானம். இவர் தற்பொழுது கதாநாயனகாக பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது

கதைப்படி ஒரு தனியார் துப்பறியும் நபர், தனது சொந்த ஏஜென்சியை நடத்துகிறார், அவரது உதவியாளரின் (விஜய் டிவி புகழ்) உதவியுடன் சிறிய வழக்குகளை தீர்க்கிறார். இருப்பினும், ஒரு தந்தை (முனிஷ் காந்த்) தனது மகளின் கொலையை  விசாரிக்க வேண்டும் என்று வரும் போது அடுத்து என்ன நடக்கிறது என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவானது.


 இயக்குநர் மனோஜ் பீதா இந்த படத்தினை இயக்கினார்.முன்னதாக ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் குளு குளு எனும் திரைப்படத்தில் சந்தானம் முற்றிலும் மாறுபட்ட சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், டிராவல் டைரிஸ் என்கிற பெயர்களில் வெளிநாட்டில் இருந்து எடுக்கப்பட்ட தம்முடைய சில வீடியோக்களை பகிர்ந்துள்ள நடிகர் சந்தானம் ஒரு நிஜ புலியின் வாலை பிடிக்கிறார். அது தூங்குகிறதா எனவும் அதன் காப்பாளரிடம் கேட்கிறார். அப்போது காப்பாளர் புலியின் தலையில் தட்ட, அது ஜெர்க் ஆக, அதை பார்த்து டக்கென சந்தானம் ஒரு நொடி ஜெர்க் ஆகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement