• Jul 26 2025

கல்கி திரைப்படத்தினால் இப்படி நடந்து இருக்கும்... நிச்சயமாக நடிகர் வாழ்வோடு இணைந்துள்ளது... சந்தோஷ் நாராயணன் கருத்து...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட திரைப்பட குழுவினரிடம் ஊடகவியலாளர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்ப அதற்கு பதில் அளிக்கின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்கள் ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.


இடையில் கொஞ்ச காலத்துக்கு முதலில் சந்தோஷ் நாராயணன் என்ற பெயர் அதிகமாக இருந்தது. தற்போது சில காலமாக அது குறைந்து உள்ளது இந்த படம் அதனை பூர்த்தி பண்ணுமா? ஒரு ரசிகரா பத்திரிக்கையாளராக பார்க்கிறோம் ரசிக்கிறோம் அதனாலே கேட்கிறோம் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இவ்வாறு பதிலளித்தார். நான் அதுதொடர்பாக பெரிதாக பார்ப்பது இல்லை, ஆனாலும் பதில் உள்ளது கல்கி திரைப்படத்தில் ஒரு வருடகாலமாக வேலை செய்துகொண்டு இருக்கிறேன் அதுனால கொஞ்சம் குறைந்து இருக்கலாம் என்று கூறினார்.


இன்னுமொரு ஊடகவியலாளர்  ஜிகர்தண்டா முதல் பாகத்தில் இருந்த இசையமைப்பு போலவே இருக்குமா எனறு கேட்க. நிச்சயமாக இருக்கும் நடிகர் வாழ்வோடு சம்மந்தப்பட்டதாக அமையும் எனவும் படத்தோடு இணைந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.   

Advertisement

Advertisement