• Jul 25 2025

திரும்பி வந்துவிடு அப்பா, அம்மா, லாரா உனக்காக... நடிகர் விஜய் ஆண்டனி மனைவி மகள் மீரா குறித்து வெளியிட சோகமான பதிவு

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தொடங்கி இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமாக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தனது மகள் மீரா இறந்தபிறகு பெரும் சோகத்தில் இருந்தார். அத்தோடு அவரின் குடும்பத்தாரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் மனைவி தனது மகள் மீரா குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.


மறைந்த தனது மகள் குறித்து எமோஷ்னல் பதிவு போட்ட விஜய் ஆண்டனி மனைவி போஸ்ட் செய்துள்ளார். விஜய் ஆண்டனி வீட்டில் சில நாட்களுக்கு முன் நடந்த சோகமான விஷயம் குறித்து நமக்கு நன்றாகவே தெரியும். மக்களும் அவருக்கு ஆதரவாக பதிவுகள் போட்டு வந்தார்கள்.இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா, தனது மகள் குறித்து எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார்.


அந்த பதிவில் " நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்திருந்தால், உன்னை எனக்கு மிக அருகில் வைத்திருந்தேன், உன்னை சூரிய சந்திரனுக்குக் கூட காட்டாமல், உன் எண்ணங்களில் மூழ்கி இறந்து போகிறேன், நீ இல்லாமல் வாழ முடியாது. பாப்பாவிடம் திரும்பி வந்துவிடு அம்மா,லாரா உனக்காக காத்திருக்கிறாள், லவ் யு தங்கம் " என்று குறிப்பிட்டு மீராவின் படத்தினையும் சேர்த்து போஸ்ட் செய்துள்ளார்.


Advertisement

Advertisement