• Jul 24 2025

அம்மாவாகப் போகும் சரஸ்வதி- அர்ஜுனின் முகத்திரையை கிழிக்க கோதை எடுத்த முடிவு- சந்தோஷத்தில் தமிழ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

கோதை கம்பனியில் ஆடர் வாங்கிய இரு முதலாளிகளும் தமிழுக்கு தமது நன்றியைத் தெரிவிக்கின்றனர். இதனைப் பார்த்த நடேசன் அவர்களிடம் சென்று எங்க கம்பெனி ஆடர் எல்லாத்தையும் வாங்க சொன்னது ரெக்கமென்ட் பண்ணினது தமிழ் தானா என்று கேட்க அவர்களும் தமிழ் சொன்னதால் தான் அந்த கம்பெனிக்கு வந்தோம் என்று சொல்ல நடேசன் சந்தோசப்படுகின்றார்.


இதனை அடுத்து வீட்டிற்கு வந்த கார்த்திக் புதிய ஆடர் கிடைச்ச சந்தோசத்தில் கோதை கிட்ட பேசிட்டு இருக்கும் போது நடேசனும் வருகின்றார். அப்போது அர்ஜுன் தமிழ் பற்றி தப்பாக சொல்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த நடேசன் இப்போ நமக்கு கிடைத்த புது ஆடருக்கு தமிழ் தான் காரணம் என்று சொல்கின்றார்.

அப்போது கோதை இப்பிடி ஒரு புது ஆடர் கிடைச்சும் தமிழ் அதை வேணாம் என்று சொன்னானா என ஆச்சரியமாகக் கேட்கின்றார். அதற்கு நடேசன் தமிழ் எப்பவும் எங்களுக்கு நல்லது தான் பண்ணுறான் தப்பா எதுவும் பணணல என்று சொல்கின்றார். இதனால் அர்ஜுனின் மாமா கோதை தமிழை நம்ப ஆரம்பிச்சிட்டா ஏதாவது பண்ணி கோதை மனச மாத்திடு மச்சான் என்று அர்ஜுனிடம் சொல்கின்றார்.

தொடர்ந்து நடேசனும் கோதையும் தனியாக பேசிட்டு இருக்கும் போது கோதை அர்ஜுன் செய்த எல்லா தில்லாலங்கடி வேலையையும் நினைத்துப் பார்க்கின்றார்.இனிமேல் மாப்பிள்ளையை நம்ப முடியாது அவரை கண்காணிச்சிட்டே இருக்கனும் தமிழ் மாப்பிள்ளையை கொலை பண்ண பார்த்திருப்பானா என்று சந்தேகமா இருக்கு என்றும் சொல்கின்றார்.

பின்கர் சரஸ்வதி கோயிலில் குடும்பம் ஒன்று சேரனும் என்று நினைத்து வழிபட்டுக் கொண்டிருக்க அப்போது ஒருவர் வந்து உன் குடும்பத்துப் பிரச்சினை எல்லாம் தீரப்போகுது. உன் புருஷன் மீது பழி போட்டவனின் முகத்திரை கிழியப் போகுது உனக்கு குழந்தை கிடைக்க போகுது என்று சொல்ல சரஸ்வதி சந்தோஷப்படுகின்றார்.


பின்னர் சரஸ்வதி இதனை வந்து தமிழிடம் சொல்ல தமிழும் நமச்சியும் சந்தோஷப்படுகின்றனர். இந்த நேரத்தில் அங்கு வரும் நடேசனும் இதைக் கேட்டு சந்தோஷப்படுவதோடு கோதை சொன்ன விஷயங்களையும் சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement