• Jul 23 2025

விஜய்க்கு யாரு ஓட்டுப் போடுவாங்க... யாருமே போட மாட்டாங்க... தளபதியை வெளுத்து வாங்கும் பிரபலம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நடிகர் விஜய், விரைவில் அரசியலில் நுழைய உள்ளார் என்பது தான் தற்போது கோலிவுட்டில் ட்ரெண்டிங் நியூஸாக மாறியுள்ளது. தனது அரசியல் எண்ட்ரி குறித்து விஜய் இதுவரை வாய்த்திறக்கவில்லை என்றாலும், அவரது நகர்வுகள் ஒவ்வொன்றும் அதனை ஆணித்தரமாக அறிவிக்கும் வகையில் உள்ளது. 


அந்தவகையில் கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தி இருந்தார். அந்த நிகழ்வில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சில விஷயங்களை மேற்கொண்டு வருகின்றார்.


இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் விஜய்க்கு யாருமே ஒட்டு போடா மாட்டார்கள் என வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றார். அந்தவகையில் அவர் கூறுகையில் "விஜய் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்கின்றனர். அப்படியே அவர் அரசியலுக்கு வந்தால், அவருக்கு யார் ஓட்டுப் போடுவார்கள், சூர்யா ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் பஞ்சாயத்து, அவர்களும் ஓட்டுப் போட மாட்டாங்க, அஜித் ரசிகர்களுடன் பெரிய போர் நடந்து வருகிறது அவர்களும் விஜய் அரசியலுக்கு வந்தால் ட்ரோல் செய்யவே துடிப்பார்களே தவிர ஓட்டுப் போட மாட்டாங்க" என்றார்.


மேலும் "சூப்பர்ஸ்டார் சர்ச்சையில் இருந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் விஜய் மேல் கொலவெறியில் இருக்காங்க, அவங்களும் விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஓட்டுப் போட மாட்டாங்க, இப்படி இருக்கும் பாதகமான சூழலினை விஜய் அலசி ஆராய்ந்தால் அரசியலுக்கே வரமாட்டார்" எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது "விஜய்யும் ரஜினிகாந்தை போல கடைசி வரை அரசியலுக்கு வருகிறேன் என பூச்சாண்டி காட்டியே தனது படங்களை ஓட வைப்பார்" எனவும் கூறி விளாசித் தள்ளியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Advertisement

Advertisement