• Jul 25 2025

உயிருக்கு போராடும் தாய் - மேடையில் பாடிய மகனின் சம்பவத்தை கேட்டு கண்ணீர் விட்ட சரிகமப நடுவர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப Lil Champs. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பெரியவர்களுக்கான 3வது சீசன் முடிவடைந்தது.

அந்த 3வது சீசன் வெற்றியாளராக புருஷோத்தமன் தேர்வாகி இருந்தார், மக்களும் அந்த முடிவை கொண்டாடினார்கள்.

தற்போது சரிகமப ஜுனியர்களுக்கான 3வது சீசன் தொடங்கப்பட்டது, ஒவ்வொருவரும் தங்களது பாடல் திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள். அப்படி ஒரு சிறுவன் ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ என்ற பாடலை பாடியுள்ளார்.

அவரின் பாடலை கேட்டு நடுவர் அபிராமி முதற்கொண்டு பலரும் கண்கலங்கினார்கள்.

அந்த சிறுவன் பேசும்போது, நான் மேடையில் பாட வேண்டும் என்பது எனது அம்மாவின் ஆசை, ஆனால் அவரால் பார்க்க முடியாது. சுய நினைவு இழந்து மருத்துவமனையில் உள்ளார் என கூற அனைவரும் சிறுவனுக்கு நாங்கள் உள்ளோம் என ஆறுதல் கூறியுள்ளனர்.



Advertisement

Advertisement