• Jul 26 2025

நான் வில்லன் இல்லை செக்கன்ட் ஹுரோ- வலிமை படம் குறித்து வெளிபடையாகப் பேசிய சர்பாட்டா பரம்பரை வேம்புலி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித். இவர் தற்பொழுது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து அண்மையில் அஜித் டப்பிங் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

 இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘துணிவு படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறீர்களா’ என்று கேட்க ‘இல்லை நான் முதல் முறையாக பாசிட்டிவ் ரோலில் நடிக்கிறேன். படத்தின் செகண்ட் ஹீரோ போன்ற ரோல்’ எனக் கூறியுள்ளார். ஜான் கொக்கன் வீரம், பாகுபலி மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement