• Jul 26 2025

ஆத்திசூடி சொல்லுங்க".. Biggboss சொன்னதும் கதிரவன் செய்த காமெடி- விழுந்து விழுந்து சிரித்த ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இனி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி நிறைந்ததாக தான் இருக்கும் என்பதால் ஹவுஸ்மேட்ஸ்களும் ஆரடவமாக விளையாடி வருகின்றனர்.

மேலும், பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆதரவினை அளித்து வருவதுடன் அவர்கள் பற்றிய கருத்தையும் தெரிவித்து வருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த விஷயம், தினந்தோறும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.


அதே போல, ஒவ்வொரு வாரமும் நடைபெறும் டாஸ்க் காரணமாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களும் இடம் பெறுகின்றன.

இதற்கு மத்தியில் இந்த வார, Luxury பட்ஜெட் டாஸ்க்காக, வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தையின் அறிவுத் திறனை மேட்ச் செய்வது போல ஆட வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

இதில் பல போட்டியாளர்களிடம், குழந்தைகளிடம் கேட்கப்படுவது போல ஏராளமான கேள்விகள் கேட்கப்பட, ஒவ்வொருவரும் பதிலளித்து ஸ்கோர் செய்கின்றனர். இந்த நிலையில், கதிரவனிடம் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் சொன்ன பதிலும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.


ஆத்திசூடியின் முதல் 5 வரிகள் சொல்லுமாறு கதிரவனிடம் பிக்பாஸ் கூற, இதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி இசையமைத்த ஆத்திசூடி பாடலை பாட தொடங்கினார். இதைக் கேட்டதும் பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் சிரிக்க, ஔவையார் எழுதிய ஆத்திச்சூடி என்பதையும் பிக் பாஸ் நினைவூட்டுகிறார்.

இந்த சம்பவம், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற நிலையில், இசை அமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியும் "😊" என ஒரு ஸ்மைலியை மட்டும் வீடியோவின் கீழ் குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement