• Jul 24 2025

"வனிதா வந்தா நேரா அசிம்கிட்ட போய்" இதை சொல்லுவாங்க- ஜாலியாகப் பேசி சிக்கலில் சிக்கிய மைனா- பீதியில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.கடந்த வாரம் ரச்சிதா எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளார். இவரையடுத்து யார் வெளியேறுவார்கள் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.  அடுத்தபடியாக, மீதமுள்ள போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நாமினேஷன் நடந்து முடிந்திருந்த நிலையில், இந்த வாரத்தில் வெளியே இருந்து சில பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். 


அந்த வகையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தியும் யூ டியூபர் அகமது மீரானும் உள்ளே வருகை தந்திருந்தனர். அவர்கள் போட்டியாளர்கள் விளையாட்டு திறன் பற்றியும், உள்ளே நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் அனைத்து போட்டியாளர்களும் அடுத்து உள்ளே யார் வருவார்கள் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் . அப்போது, பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்த வனிதா உள்ளே வருவார் என போட்டியாளர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக ஆவேசமாகவும் செயல்பட்ட வனிதா குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயங்களை பேசி கொண்டிருக்க, நடுவே பேசும் மைனா நந்தினி, "வனிதா வந்தாங்கன்னா நேரா அசிம்கிட்ட போயிட்டு நான் உங்க Fan அசிம்ன்னு சொல்ல போறாங்க" என ஜாலியாக குறிப்பிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement