• Jul 25 2025

முல்லையை விழுந்து விழுந்து கவனித்த குடும்பத்தார்- கதிர் கெஞ்சியும் வீட்டுக்குள்ளே வர மறுத்த ஜீவா

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்போம்.

ஹாஸ்பிட்டலில் முல்லை இருப்பதால் எல்லோரும் விழுந்து விழுந்து கவனிக்கின்றனர். முல்லைக்கு மீனா உணவு சமைத்துக் கொண்டு வந்து கொடுக்கின்றார்.முல்லையின் அப்பா கதை சொல்லி துாங்க வைக்கின்றார். கதிர் இரவு முழுவதும் துாங்காமல் முல்லையைப் பார்த்துக் கொள்கின்றார்.


இப்படி எல்லோருடைய கவனிப்பாலும் முல்லை குணமாகி விட்டதோடு அவரை வீடடிற்கு கூட்டிட்டு போகலாம் என்றும் சொல்லப்படுகின்றது. மேலும் முதன் முறையாக கையில் குழந்தையை வாங்கியதும் எல்லோரும் சந்தோஷப்பட்டு குழந்தையை வாங்கிக் கொஞ்சுகின்றனர். தொடர்ந்து எல்லோரும் வீட்டிற்குச் செல்கின்றனர்.

அங்கே கஸ்துாரி ஆரத்தி எடுத்து முல்லையையும் குழந்தையையும் உள்ளே அழைக்கின்றனர்.எல்லோரும் உள்ளே போக ஜீவா மட்டும் வெளியில் நிற்கின்றார். உள்ளே சென்ற எல்லோருக்கும் ஐஸ்வர்யா காபி போட்டுக் கொடுக்க எல்லோரும் கலகலப்பாக பேசுகின்றனர். இந்த நேரம் கதிர் எழும்பி வந்து ஜீவாவை உள்ளே அழைக்க ஜீவா உள்ளே செல்ல மறுத்து விடுகின்றார். 


கஸ்ட துன்பத்தில் பங்கெடுத்து விட்டு அவரவர் அங்க வேலையைப் பார்க்கிறது தான் ரொம்ப நல்லம் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement