• Jul 24 2025

விவாகரத்து நடிகையின் வீட்டிற்கு அடிக்கடி செல்லும் தனுஷ்... கண்டுபிடித்து எச்சரித்த ரஜினி... பிரபலம் கூறிய ஷாக்கிங் நியூஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் கணவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றார்கள்.


தனுஷைப் போலவே நடிகை அமலாபாலும் இயக்குநர், ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்தும் அமலாபால் படங்களில் நடித்த வண்ணமே இருக்கின்றார். இருப்பினும் இவர் நடித்த படங்கள் எதுவுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் அமலா பால், தனுஷ் குறித்து பிரபல பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு ஓர் அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துள்ளார். அந்தவகையில் தனுஷ் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு செல்லாமல் அமலா பாலுடன் கூத்தடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


இதனை அவதானித்து வந்த ரஜினிகாந்த் அமலா பாலின் அப்பார்ட்மெண்டுக்கு சென்று "அவர் குடும்பஸ்தன், அவருக்கு குடும்பம் குழந்தைகள் இருக்கிறது, நீங்கள் இருவரும் இப்படி எல்லாம் நடந்து கொள்வது சரியல்ல மீண்டும் இதுபோல் நடப்பதாக எனக்கு தெரிய வந்தால் ரஜினிகாந்தின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்" என அமலாபாலை எச்சரித்து விட்டுச் சென்றுள்ளார்.

ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சால் கோபமடைந்த அமலா பால் " இதுகுறித்து நீங்கள் உங்க மருமகனை கேட்க வேண்டியது தானே? என்னுடைய அப்பார்ட்மெண்டுக்கு வருவதெல்லாம் சரியல்ல" என திட்டியதாகவும் செய்யாறு தெரிவித்திருக்கின்றார். 

Advertisement

Advertisement