• Jul 23 2025

தம்பி விஜய் அரசியலுக்கு வரணும்.. எங்களால் தனியாக சண்டையிட முடியல... சீமான் கோரிக்கை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் எந்தளவிற்கு சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருகின்றாரோ, அதேபோல் அரசியலிலும் உள்நுழைந்து உச்ச நட்சத்திரமாக விளங்க வேண்டும் என பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர்.

ஆனால் விஜய்யோ தனக்கு அரசியல் மீது ஆர்வம் இல்லை எனவும், தான் அரசியலுக்கு வர மாட்டேன் எனவும் உறுதியாகத் தெரிவித்து விட்டார்.


இந்நிலையில் தற்போது பிரபல அரசியல் வாதியான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கோரிக்கை ஒன்றினை முன் வைத்திருக்கின்றார்.


அதாவது "தம்பி விஜய் அரசியலுக்கு வரணும், அவர் வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும், நாங்க ஓர் ஆள எதிர்த்துச் சண்டையிட முடியல, அவர் வந்தா இன்னும் ஆதரவாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார் சீமான். 

Advertisement

Advertisement