• Jul 25 2025

அசீமை அனுப்பிட்டு அசலை மீண்டும் கொண்டுவாங்க- பிக்பாஸிடம் டீல் பேசிய பிரபலம்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பித்த நாளிலிருந்து பல மாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றது. ஜி.பி முத்து குடும்பத்திற்காக வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சாந்தி மற்றும் அசல் ஆகியொர் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளனர்.

கடந்த வாரம் பொம்மை டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தமக்கிடையில் மோதிக் கொண்டனர். குறிப்பாக அசீம் ஷிவின் கிட்ட நடந்து கொண்ட விதம் மக்களை பெரிதும் பாதித்தது. தற்பொழுது 18 போட்டியாளர்களே மீதமாக உள்ளனர்.


இதில் இந்த வாரம் ஆயிஷா அல்லது ஷிவின் தான் வெளியேறுவார் என்று கதைகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றது.இருப்பினும இது குறித்த சரியான தகவல் இந்த வாரம் தான் தெரிய வரும்.

அசல் கோளாறு வெளியேறியதில் இருந்து நிவாஷினி அழுவது, தனியாக இருப்பது என இருக்கிறார், ரசிகர்களும் இவர் விளையாட்டில் தான் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என பதிவு செய்து வருகிறார்கள்.அசல் வெளியேறியதில் இருந்து சோகமாக இருக்கும் நிவாஷினி பிக்பாஸிடம் டீல் பேசியுள்ளார்.


 அதாவது அசலை வீட்டிற்கு மீண்டும் அனுப்ப வேண்டும் அசீமை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்.அசல் வீட்டிற்கு வந்தால் எங்களது நட்பை துண்டித்துக் கொள்வேன், அப்போது அவர் விளையாட்டில் கவனம் செலுத்தி ஜெயிப்பான் என பேசியுள்ளார்.இதோ அவரது வீடியோ,


Advertisement

Advertisement