• Jul 24 2025

கர்நாடகாவில் மாஸ் காட்டிய சூப்பர்ஸ்டார்- ராஜமரியாதை கொடுத்த முதல்வர் -வைரலாகும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கர்நாடக மாநிலம் உதயமான தினமான நேற்று கர்நாடக ராஜயோத்சவா என்கிற நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டது. ,ந்த நிகழ்வில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் புனீத் ராஜ்குமாரின் மனைவியிடம் கர்நாடக ரத்னா விருதை வழங்கினர்.


இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் தனி விமானத்தில் சென்றார்.அப்போது விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் விமான நிலையத்திற்கே வந்து ரஜினியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.


அதுமட்டுமின்றி நேற்றைய விழாவின் போது திடீரென மழை பெய்தது. இதில் ரஜினிகாந்த் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு கர்நாடக அமைச்சர் முனிரத்னா என்பவர் அவருக்கு குடைபிடித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

 

அதுமட்டுமின்றி அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ரஜினியை நேரில் அழைத்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடி அவருக்கு ராஜ மரியாதை கொடுத்த வீடியோவில் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement