• Jul 25 2025

இரண்டாவது முறை நடந்த சீரியல் நடிகை ரேஷ்மா திருமணம்- மாப்பிள்ளை இவரா..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில்  பிரபலமானவர் ரேஷ்மா. மேலும் அதில் கிடைத்த பிரபலம் அவர் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும் அதில் நடிக்கும் போது அதே சீரியலில் நடித்த மதன் என்பவருடன் காதல் ஏற்பட இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.


திருமணத்திற்கு பின்னர் இருவரும் விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.எனினும்  இப்போது ரேஷ்மா ராடான் நிறுவனம் இயக்கத்தில் கிழக்கு வாசல் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் இந்த தொடரின் ப்ரமோ அண்மையில் தான் படமாக்கப்பட்டது.

தற்போது மதன்-ரேஷ்மா இருவரும் இரண்டாவது முறை துளசி மாலை அணிந்து திருமணம் செய்துகொண்ட ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகின்றது.

எனினும் அதைப்பார்த்த ரசிகர்கள் அழகான ஜோடி வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 



Advertisement

Advertisement