• Jul 25 2025

வட்டிக்குப் பணம் வாங்கி ஐஸ்வர்யா செய்த காரியம்- நெஞ்சுவலியால் துடித்த தனம்- ஜீவா முன்னால் கேலி பண்ணிய ஜனார்த்தனன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஐஸ்வர்யா சித்தியிடம் பணம் கேட்க அவர் வட்டிக்கு வாங்கித் தருவதாக சொல்கின்றார். இதனால் ஐஸ்வர்யாவும் சரி என்கிறார். தொடர்ந்து இரவு முழுவதும் தனம் துாக்கமில்லாமல் தவிக்க முல்லை எழும்பி என்னாச்சு அக்கா என்னும் போது தனம் நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு என்று சொல் அப்போது முல்லை ஹாஸ்பிட்டல் போவோமா அக்கா என்று கேட்டும் போது அது ஒன்றுமில்லை நீ போய் துாங்கு என சமாளித்து விடுகின்றார்.


பின்னர் விடிந்ததும் முல்லையும் தனமும் சிரித்து சிரித்து பேசிட்டு இருக்கும் போது அங்கு கண்ணனும் ஐஸ்வர்யாவும் வருகின்றனர்.இவர்களை எதிர்பார்க்காத தனம் என்ன விஷயம் என கேட்ட கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு வைத்திருக்கும் விடயத்தைச் சொல்கின்றார். அதுவும் பெரிய ஹோலில் செய்யப்போவதான சொல்ல முல்லையும் தனமும் அதிர்ச்சியடைகின்றனர்.


மேலும் நீங்க எதுக்கு பண்றீங்க. அடுத்த மாதம் நாங்களே பண்ணுறோம் என்று சொல்ல ஐஸ்வர்யா வேண்டாம் நாங்களே பண்ணிக்கிறோம் என்று திமிராக் பேசுகின்றார்.

பின்னர் மூர்த்தி வந்ததும் கண்ணன் வளைகாப்பு வைக்கப் போகும் விஷயத்தைச் சொல்ல மூர்த்தி கோபத்தில் திட்டுகின்றார். எப்படியாவது போகட்டும். அவங்களை நினைத்தாலே கோபம் தான் வருது என்று கூறுகின்றார்.

தொடர்ந்து வளைகாப்புக்கு அழைப்பதற்காக ஜீவா வீட்டுக்குச் செல்கின்றனர்.அங்கு ஜீவாவிடம் வளைகாப்பு வைக்கும் விஷயத்தை சொல்ல அவரது மாமனார் மண்டபத்துக்கே நிறைய செலவாகும் போல இருக்கே என நக்கலடிக்கின்றார். இதனைப் பார்த்த ஜீவா கடுப்படைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement