• Jul 26 2025

சீரியல் நடிகையாக இருந்து சினிமா நடிகையாக மாறிய.. பிரியா பவானி சங்கரின் சொத்து மதிப்பு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தனது திரைப் பயணத்தில் முதலில் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் டிவியில் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். அந்த சீரியல் மூலம் கிடைத்த புகழை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியா பவானி சங்கர், மேயாத மான் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார்.


இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்த இவர் ஜெயம்ரவியுடன் அகிலன் படத்திலும், சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறாக பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் பிரியா பவானி சங்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 


அந்தவகையில் பிரியாவுக்கு இதுவரை சொந்த வீடு இல்லாத நிலையில் அண்மையில் தான் சொந்த வீட்டில் குடியேறினார். மேலும் இவர், BMW X1 மற்றும் காண்டோ கார் வைத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது ஒரு படத்திற்கு சுமார் 20 லட்சம் ரூபாயை சம்பளமாக பெரும் பிரியா பவானி சங்கரின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் 6 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement