• Jul 24 2025

பிக்பாஸ் சீசன் 6 இல் முக்கிய போட்டியாளராக களமிறங்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் வரும் அக்டோபர் மாதம் 9ம் திகதி பிரமாண்டமாக தொடங்கவுள்ள ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த ஷோ தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம் எனப் பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

மேலும் தமிழில் சீசன் 6 ஆரம்பிக்கப்படவுள்ளது.அதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக வர போகிறார்கள் என பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த முறை சற்று வித்யாசமாக பொது மக்களும் போட்டியாளர்களாக வரலாம் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஆடிஷனும் நடந்தது.


அத்தோடு இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்த முறை சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.இதனால் யாரெல்லாம் வருகிறார்கள் என தற்போது சில தகவல்களும் உலா வந்திருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் முன்பு நடித்து வந்த ரோஷிணி ஹரிப்ரியன் தற்போது பிக் பாஸ் 6க்கு வர இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் அந்த தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய நிலையில் அதற்கு பிறகு குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது அவர் பிக் பாஸ் 6 வருவதும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 


Advertisement

Advertisement