• Jul 25 2025

பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத ஷிவின்-நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் சீசன் 6 இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டதால் சில எமோஷனலான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருந்த பிக் பாஸ் வீடு இப்போது ஆனந்தம் விளையாடும் வீடாக மாறிவிட்டதா என ரசிகர்களுக்கே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டாஸ்க் எல்லாம் முடிந்து ஜாலியாக அரட்டை அடித்து வருகின்றார்கள்.

இந்த சீசனில் இருந்து இதுவரை வெளியேறிய 11 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் திரும்பவும் அடியெடுத்து வைத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கமல் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதில் பிக் பாஸ் வீட்டில் யாராவது ஒருவருக்கு நீங்கள் நன்றி கூறுவதாக இருந்தால் அது யார் எனக் கேட்கிறார்.


அதன்படி முதலில் ஷிவின் எழுந்து கண்ணீர் மல்க ரச்சிதாவிற்கு நன்றி கூறுகிறார். அடுத்து தனா இந்த வீட்டில் கிடைத்த அழகான தங்கை என நெகிழ்ச்சியடைகிறார் கதிர். ராபர்ட் மாஸ்டர் வழக்கம் போல அப்பா ஸ்தானம் கொடுத்த குயின்ஷிக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல் அசீம் அண்ணா கூட பெரிய கனெக்ட் இருக்குதுன்னு தனா சொல்ல, விக்ரமனுக்கு நன்றி தெரிவிக்கிறார் மகேஷ்வரி. 

இறுதியாக  ராம், ஷிவின் எனக்கு சிஸ்டர் மாதிரி என உருக்கமாக கூற, அதைக் கேட்ட ஷிவின் கதறி அழுகிறார். இந்த நன்றி சொல்லும் சம்பவம் பிக் பாஸ் வீட்டையே மெகா சீரியல் போல் மாற்றியுள்ளது. ஆனாலும் இது ரசிகர்களை மிகவும் உணர்ச்சிவயப்பட வைத்துள்ளது.


Advertisement

Advertisement