• Jul 25 2025

முதல் படத்திலேயே என்னை மோசமாக காண்பிச்சாரு- பாலாவை நம்பி ஏமாந்து போன நடிகை ஜனனி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் ஜனனி ஐயர். இவர் தெகிடி என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவன் இவன் என சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவரைப் பிரபல்யமாக்கியது  பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இருப்பினும் பிக்பாஸிற்குப் பிறகு படவாய்ப்பின்றி தவித்து வருகின்றார்.இந்த நிலையில் இவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பொதுவான சினிமாவில் நடிக்க வருபவர்கள்  எப்படியாவது இந்த இயக்குநரோடு ஒரு படத்திலேயாவது நடிக்கவேண்டும் என வருவார்கள். அப்படி பட்டவர்களில் மணிரத்னம், ஷங்கர், பாலா, போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


அதில் ஜனனிக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கமிட் ஆனார்.அப்போது அந்தப் படத்தில் ஹீரோயின் ஓப்பனிங் சீன். உடனே ஜனனி முதல் முறை தன்னை அறிமுகம் செய்யப்போகிறார்கள் என்ற ஆசையில் தலையை நன்றாக வாரி மேக்கப் எல்லாம் போட்டு வந்து நின்றாராம். ஆனால் பாலா ‘என்ன இப்படி வந்து நிக்குற? போய் தலையை நல்லா கொழைச்சுட்டு வா’ என்று சொன்னாராம்.


அதாவது ஜனனி வீட்டில் விஷால் திருடுகிற மாதிரியான சீன். அப்போது தூக்கத்தில் இருந்த ஜனனி எழுந்து வருவார். அதனால் தான் பாலா தூக்கக் கலக்கத்தில் இருந்து எப்படி வருவோமோ அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி சொன்னாராம்.இதை ஒரு பேட்டியில் கூறிய ஜனனி பெரிய எதிர்பார்ப்போடு போனேன், என்னை முதன் முறையாக அறிமுகம் செய்கிறார்கள், ஒரு ஹீரோயினை எப்படி காட்டுவாங்க? அப்படி போனேன். ஆனால் எல்லாம் போச்சு என ஜனனி புலம்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement