• Jul 25 2025

நடுகடல் சூட்டிங்கைத் தொடர்ந்து பாலைவனத்திற்குச் சென்ற தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் குழுவினர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் தென்றல் வந்து என்னைத் தொடும். ஒரு கொலை வழக்கால் பிரிந்த கணவன் மனைவி சேருவார்களா இல்லையா என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

இந்த சீரியல் Star Jalsa தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Khelaghor என்ற சீரியலின் ரீமேக் என்பதும் முக்கியமாகும்.2021ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் தற்போது 600 எபிசோடுகளை கடந்துள்ளது.


எப்போது வெற்றிக்கு சுடர் பற்றிய உண்மையும் அபிக்கு வெற்றி நிரபராதி என்ற உண்மையும் தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.முதலில் ஒரு மலை, பிறகு நடுகடல் என படப்பிடிப்பு நடத்திய இந்த தொடர் குழுவினர் இப்போது ராஜஸ்தான் சென்றுள்ளனர்.


அங்கு பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் அடுத்து சில வாரங்கள் இன்னும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகதாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement