• Jul 26 2025

நயன்தாராவின் திருமணப் புடவையை காப்பி அடித்து ஸ்ரேயா செய்த செயல்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.


அத்தோடு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ள இவர் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் தொடர்ந்து தென்னிந்திய திரை உலகில் கவனம் செலுத்தி வருகிறார்.


அதுமட்டுமல்லாது அன்று தொடக்கம் இன்றுவரை கவர்ச்சிக்கு தடை போடாமல் பல விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷூட் செய்து அதனை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து வருபவர்.


இந்நிலையில் தற்போது நயன்தாராவின் திருமண சேலையை காப்பி அடித்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ள இவரது புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


அதாவது சிவப்பு நிற ரோஜாவை போல் காந்த கண்களால் ரசிகர்களை மயக்கி கவர்ச்சி ரணகளம் செய்யும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை தாறுமாறாக வழங்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement