• Jul 26 2025

தருணின் அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த ஸ்ருதி- அதிர்ச்சியில் உறைந்த மனோகர்- விறுவிறுப்பான திருப்பங்களுடன் மௌனராகம் சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மௌனராகம் சீசன் 2. கார்த்திக் என்னும் பாடகர் தான் காதலித்து திருமணம் செய்த மல்லிகாவையும் தனது மகள் சக்தியையும் இரண்டாவது மனைவி கதாம்பரியின் சூழ்ச்சி காரணமாக பிரிந்திருந்தார்.

தற்பொழுது காதாம்பரியின் சூழ்ச்சியை முறியடித்து அவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டு மல்லிகாவுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இது ஒரு புறம் இருக்க சக்தி வருண் என்பவரைத் திருமணம் செய்திருக்கின்றார்.காதாம்பரியின் மகள் ஸ்ருதி தருணைத் திருமணம் செய்திருக்கின்றாள்.


சக்தி வாழக்கூடாது என்பதற்காக பல்வேறு குற்றங்களை செய்துள்ளார். இதனால் தருண் ஸ்ருதியை வெறுத்து விட்டான். எனவே தருணை எப்படியாவது தன் வசப்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்ருதி தருணின் அம்மா உயிரோடு இருப்பதை வீட்டில் கூறி விட்டார்.

அது மட்டுமல்லாமல் தருணின் அம்மாவை நேரடியாக கூட்டிக் கொண்டு வந்து விட்டார். இதனால் மனோகரும் தருணும் அம்மாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அழுகின்றனர். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement