• Jul 25 2025

வயதான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்... காரணம் என்ன..? அவரே கூறிய பதில் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாககிகளில் ஒருவராக உயர்ந்திருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சினிமாவுக்கு வந்த புதிதில் இளம் கதாநாயகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்தார். ஆனால் இப்போது 60 வயதைக் கடந்த சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். 


இவ்வாறாக இவர் வயதான நடிகர்களுடன் அதிகளவில் நடித்து வருவது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை கிளப்பி உள்ளது. அதாவது பட வாய்ப்பு இல்லாமல் நடிக்கிறாரா? அல்லது அதிக சம்பளம் கிடைப்பதால் நடிக்கிறாரா? என்றெல்லாம் தாறுமாறாக கேள்விகள் எழுப்புகின்றனர். 


அந்தவகையில் பாலகிருஷ்ணா ஜோடியாக 'வீரசிம்மா ரெட்டி' படத்திலும், சிரஞ்சீவி ஜோடியாக 'வால்டர் வீரய்யா' படத்திலும் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளன. 


இந்நிலையில் ஸ்ருதிஹாசனிடம் வயதான நடிகர்களுடன் நடிப்பது குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்ருதிஹாசன் பதிலளிக்கையில் ''நடிப்பு துறையில் வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் உயிரோடு இருக்கும் வரை நடிக்கலாம். இதை ஏற்கனவே பல வயதான ஹீரோக்கள் தங்களைவிட இரண்டு மடங்கு வயது குறைவான இளம் கதாநாயகிகளுடன் நடித்து நிரூபித்து இருக்கிறார்கள். இதற்கு நான் ஒன்றும் விதி விலக்கு அல்ல'' எனக் கூறியிருக்கின்றார்.

Advertisement

Advertisement